மெய்ப்பொருள் காண்பது அறிவு ..

Monday, August 14, 2006

எங்கே போனீர்கள்?









'சின்னப் பசங்கள எதுக்கு கட்டாயப்படுத்தி சேக்குறாங்க' -
என்று அக்கறைப்பட்டவர்களே !
இப்போது
சின்னஞ்சிறுத் தளிர்கள்தான்
செத்துக் குவிகின்றன..
எங்கே போனீர்கள்?

'கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலத்தான் சாவு' -
என்ற தத்துவஞானிகளே !
இங்கு
பேனா பிடித்தப் பிள்ளைகள்தான்
பிணமாய் கிடக்கின்றன.
எங்கே போனீர்கள்?

'ஒரு அரசாங்க இராணுவம்
எப்படி தன்நாட்டு மக்களையே கொல்லுவாங்க,
சும்மா கதையளக்காத ..' -
என்னும் அரைவேக்காட்டு அறிவுஜீவிகளே !
புரிகிறது.
இனிமேலும்
அவர்கள் அந்நாட்டு மக்களாய்
சவக்குழியில் குவியமாட்டார்கள்.
எங்கே போனீர்கள்?

இன்னமும்
'அமைதியா பேசித் தீர்க்கவேண்டியதுதான .. '
என்பீர்களேயானால்,

'பொத்திக்கிட்டு போங்கடா.'


(முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது சிறிலங்கா இராணுவம் இன்று(14 Aug 2006) நடத்திய கொடூர விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 129 பேர் படுகாயமடைந்துள்ளனர்)

5 Comments:

  • தம்பி த.அகிலன்ஜூலை 19 வாக்கில் 'செஞ்சோலை' இல்லம் சென்று அதைப்பற்றிய ஒரு கட்டுரை எழுதி அன்புடன் குழுமத்தில் இட்டிருந்தார் அதனை மீள்பதிவு செய்துள்ளார் பாலபாரதி. அதன் சுட்டி இதோ தாயாய் ,சகோதரியாய், தோழியாய்.... அரசாங்கத்திற்கு ஒத்து ஊதுபவர்களே படித்துவிட்டுச் சொல்லுங்கள் அவர்கள் குழந்தைப் போராளிகளா என்று.

    By Blogger ப்ரியன், at Wed Aug 16, 05:35:00 AM 2006  

  • கண்ணீரை வரவழைத்தது. அதனால் வார்த்தைகள் வரவில்லை.

    By Blogger இளங்குமரன், at Sun Aug 20, 04:46:00 AM 2006  

  • சொன்ன விதம் நன்றாயிருக்கிறது

    By Blogger Chandravathanaa, at Sun Sep 17, 10:44:00 AM 2006  

  • நல்ல பதிவு... முடித்த விதம் நச்.

    By Blogger saji, at Wed Jun 27, 11:32:00 PM 2007  

  • ஒன்றும் அறியாத இந்த பிஞ்சு மனங்களை இனமென்னும் இல்லாத எமன் அழித்துக்கொண்டு இருக்கிறான்.துரியோதனன் இருந்திருந்தாலும் இக்கொடுமையை கண்டு மனம் திருந்தி வன்முறையை விட்டு அறநெறியை ஓங்கச் செய்திருப்பான்...
    வன்முறையை கை விடுங்கள் plz... அமைதியாய் வாழுங்கள்
    இவண்,
    மேட்டூர் சரவணன் செ.சு

    By Blogger Unknown, at Fri Apr 11, 09:36:00 AM 2008  

Post a Comment

<< Home