இவையெதுவும்
முன்பின் அறியாத யாரோ
தலைசாய்க்கத் தோள் கொடுக்கும்
நேசம்.
அம்மாவின் சேலையைப் பிடித்துக்கொண்டு
தூங்கி வழியும் சிறுபிள்ளைக்கு கொஞ்சம்
இடம்.
பஸ் மாறி ஏறி
பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட
முகம் தெறியாத பயணி குறித்த
கவலை.
இடையிடையே நிற்கும் சிற்றூர்களில்
முறுக்கு வாழை திராட்சை
விற்கும் பொடியன்களின்
குரல்.
இவையெதுவும் கிடைப்பதில்லை
முன்பதிவு செய்து பயணிக்கும்
A/C Volvo பேருந்தில்.
தலைசாய்க்கத் தோள் கொடுக்கும்
நேசம்.
அம்மாவின் சேலையைப் பிடித்துக்கொண்டு
தூங்கி வழியும் சிறுபிள்ளைக்கு கொஞ்சம்
இடம்.
பஸ் மாறி ஏறி
பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட
முகம் தெறியாத பயணி குறித்த
கவலை.
இடையிடையே நிற்கும் சிற்றூர்களில்
முறுக்கு வாழை திராட்சை
விற்கும் பொடியன்களின்
குரல்.
இவையெதுவும் கிடைப்பதில்லை
முன்பதிவு செய்து பயணிக்கும்
A/C Volvo பேருந்தில்.


5 Comments:
கவிதை(கள்) நன்றாக இருக்கின்றன. வலைப்பதிவு உலகின் வரவுக்கும் வாழ்த்துக்கள்.
By
இளங்கோ-டிசே, at Sun Jun 11, 11:49:00 AM 2006
கவிதைகளில் உணர்வுகளை நன்றாக தொட்டு இருக்கிறீர்கள். வாருங்கள் எங்களுடன் கைகோர்க
By
கோவி.கண்ணன், at Thu Jun 15, 04:36:00 AM 2006
vaarungal :))
By
ரவி, at Fri Jul 21, 10:59:00 PM 2006
நன்றி தமிழன்,கண்ணன்,ரவி :)
By
அ.பிரபாகரன், at Wed Mar 28, 12:22:00 AM 2007
நல்லா எழுதுறீங்க..தமிழ்மணத்துல இணைஞ்சு இருக்கீங்களா..இல்லாட்டி இணைச்சுக்கோங்க..இந்த a/c bus பயணத்தின் வெறுமை இது வரைக்கும் நினைச்சுப் பார்க்காதது..சொகுசான அடைக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டி தான்..நான் எதிர்ப்பார்க்காத கரு..தொடர்ந்து எழுதுங்க..வாழ்த்துகள்
By
அ. இரவிசங்கர் | A. Ravishankar, at Sun Apr 01, 03:43:00 PM 2007
Post a Comment
<< Home