அவனுக்கேனும் நினைவிருக்குமா?
எங்கோ ஒரு
பேருந்து நிறுத்ததிலோ
கூட்ட நெரிசலிலோ
சந்தித்து,
புன்னகைத்து,
கைக்குலுக்கி,
பரஸ்பரம் விசாரித்து
ஆளே மாறிப்போனதாய்
ஆச்சரியப்பட்டு
மீண்டும் எங்கோவொரு
நிறுத்ததிலோ நெரிசலிலோ
சந்திப்போம் என்ற நம்பிக்கையில்
'பார்க்கலாம்டா மச்சான்'
என்று பிரியும்போதும்
கேட்க வெட்கமாய் இருந்தது
மறந்துபோன அவன் பெயரை.
அவனுக்கேனும் நினைவிருக்குமா
என் பெயர்?
பேருந்து நிறுத்ததிலோ
கூட்ட நெரிசலிலோ
சந்தித்து,
புன்னகைத்து,
கைக்குலுக்கி,
பரஸ்பரம் விசாரித்து
ஆளே மாறிப்போனதாய்
ஆச்சரியப்பட்டு
மீண்டும் எங்கோவொரு
நிறுத்ததிலோ நெரிசலிலோ
சந்திப்போம் என்ற நம்பிக்கையில்
'பார்க்கலாம்டா மச்சான்'
என்று பிரியும்போதும்
கேட்க வெட்கமாய் இருந்தது
மறந்துபோன அவன் பெயரை.
அவனுக்கேனும் நினைவிருக்குமா
என் பெயர்?
Labels: கவிதை


15 Comments:
nice one. came thru yopur comment. interesting...by the way simplicity
By
Osai Chella, at Fri Jun 16, 09:33:00 PM 2006
அருமை.
By
Chandravathanaa, at Wed Aug 16, 01:34:00 AM 2006
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்
By
ப்ரியன், at Wed Aug 30, 05:17:00 AM 2006
அருமை
வாழ்த்துக்கள்
By
Anonymous, at Sun Sep 17, 11:33:00 AM 2006
என்னை அழைத்தீர்களா ?
By
ரவி, at Fri Jan 19, 12:42:00 AM 2007
உண்மை தான். சில சமயம் ஆள எங்கே எப்படிப் பார்த்துப் பழகி இருந்தோங்கிறதையே மறந்துடுறோம்
By
அ. இரவிசங்கர் | A. Ravishankar, at Sun Apr 01, 03:45:00 PM 2007
அழகான கவிதை!! :-)
By
CVR, at Fri Jul 06, 06:29:00 AM 2007
நல்ல கவிதை. பலரின் அனுபவமும் கூட.
/* நிறுத்ததிலோ நெறிசலிலோ */
நெரிசலிலோ ?
By
வெற்றி, at Fri Jul 06, 07:48:00 PM 2007
எழுத்துப்பிழைகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி வெற்றி !!
By
அ.பிரபாகரன், at Sun Jul 08, 02:57:00 AM 2007
nee en nanban enbathil enakku perumai....vazlthukal....
By
AMEER, at Tue Nov 20, 06:00:00 AM 2007
வாசிப்பவர் உள்ளத்தில் சிறு உறுத்தலயாவது எற்படுத்துவதுதான் கவிதையின் வெற்றி.அந்நவகையில் உங்களதும் வாழ்த்துக்கள் தோழரே
By
Unknown, at Tue Dec 04, 04:49:00 AM 2007
அருமையான கவிதை.... சில நேரங்களில் எனக்கும் இதே அனுபவம் உண்டு!!! இந்த பாழாய்ப் போன மனசு, நினைவில் வைக்க வேண்டிய பல விஷயங்களை மறந்து தொலைத்து விடுகிறது......
By
ராம்குமார் - அமுதன், at Sun Dec 30, 02:07:00 AM 2007
Fantastic.Simple but striking thought.
By
Bavani, at Thu Jan 03, 03:12:00 AM 2008
ஏண்டா டேய் என்ன இப்பலாம் மச்சான் மச்சானு கூப்டுக்கனுகீறியே,என் பேரு மறந்து பூச்சா உன்கு.. கஸ்மாலும் என் பேரு சரவணன் டா..நல்லா நியாபகம் வச்சுக்கோ அப்பறம் பஸ்ச உட்டு எறங்கி பீல் பண்ணாத என்னா?....
By
Unknown, at Fri Apr 11, 09:42:00 AM 2008
உண்மை இப்படிநிறைய பெயர் மறந்துபோயிருக்கேன் :(
By
முத்துலெட்சுமி/muthuletchumi, at Fri Jun 20, 09:15:00 PM 2008
Post a Comment
<< Home